உயிரை மாய்த்துக் கொண்ட பிக் பாஸ் துணை இயக்குனர்... சிக்கிய டைரி! தமிழ் பிக் பாஸில் நடந்தது என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணை இயக்குனராக இருந்த ஸ்ரீதரன் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக் பாஸ்
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல ரிவியில் அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிலையில் பிரபல ரிவியில் குறித்த நிகழ்ச்சியில் இணை இயக்குனராக ஸ்ரீதரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு வ.உ.சி முதல் தெருவை சார்ந்த லெனில், லதா தம்பதியினருக்கு வானரசன் மற்றும் ஸ்ரீதரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களில் ஸ்ரீதரன் விஸ்காம் பட்டப்படிப்பு முடித்து பிரபல ரிவியில் அசோசியேட் இயக்குனர் இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த தினங்களில் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதரன் கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார். வெளியே சென்ற பெற்றோர்கள் வீடு திரும்பிய பின்பு ஸ்ரீதரன் அறை கதவை தட்டிப் பார்த்துள்ளனர்.
திறக்காத காரணத்தினால் கதவை உடைத்து உள்ளே திறந்து பார்த்த போது ஸ்ரீதரன் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
சிக்கிய டைரி
அவர் எழுதிவைத்திருந்த டைரியை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணை இயக்குனராக இருந்தவருக்கு எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்றும் தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதியுள்ளது.
மேலும் ஸ்ரீதரனுக்கு திருமண வரன் அமையாமலும் இருந்ததால், யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்று முடிவெடுத்து இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
பொலிசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |