‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி! என்ன நடந்தது?
பிரபல காமெடி நடிகர் ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன், சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்
2011ம் ஆண்டு தமிழ் சினிமாவில் லத்திகா என்ற் படம் மூலமாக அறிமுகமானவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். சொந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமானதால், பலரும் இவரை விமர்சித்தனர்.
அதனை தொடர்ந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்கிற தமிழ் திரைப்படத்தின் மூலம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
அதன் பின்னர் கோலி சோடா, மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா ஆகிய படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக வலம் வருகின்றார்.
தற்போது இவர் ‘முந்தினம்’ என்கிற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.இந்த நிலையில் நேற்று மாலை தன்னுடைய பயணத்தின் போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று மதியம் பயணத்தின் போது திடீரென்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சைப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |