நிகழ்ச்சியில் பாதியில் விரட்டியடிக்கப்பட்ட நபர்.. பொங்கி எழுந்த இளம்பெண்- கடைசியாக கூறிய வார்த்தைகள்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாகரத்தான பெண்களை தவறாக பேசிய நபர் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார்.
தமிழா தமிழா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் விவாகரத்தால் கஷ்டப்படுவது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
அந்த சமயத்தில் ஆண்கள் தரப்பில் இருந்தவர்கள் பேசிய வார்த்தைகளை கேட்டு பெண்ணொருவர் வெளியேறுவதற்கு முயற்சி செய்தார்.
இதனை தொடர்ந்து தொகுப்பாளர் ஆவுடையப்பன் பெண்ணை மீண்டும் வரவழைத்து கணவர் இல்லாமல் தாங்கள் படும் வேதனை தெளிவாக பகிர்ந்திருந்தார்.
“என் முதுகுக்கு பின்னாடி என் மகன் என்று தெரியாமல் தவறாக பேசுகிறார்கள். இதற்கு காரணம் நான் விவாகரத்து செய்து விட்டேன் தனியாக இருக்கிறேன் என்ற ஒரே காரணம்தான். விவாகரத்தால் எங்களுக்கு பல வேதனைகள் இருக்கிறது என்று அந்த பெண் கண்ணீரோடு பேசுகிறார்கள்.
நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நபர்
இந்தநிலையில்,எதிர் தரப்பிலிருந்த நபர் ஒருவர், “ நெருப்பு இல்லாமல் புகைச்சல் வராது உங்களை தப்பா பேசுறாங்கன்னா அங்க ஏதோ இருக்குன்னு தானே அர்த்தம்..” எனக் கூற தொகுப்பாளர் உட்பட அரங்கத்தில் பலர் கோபப்பட்டார்கள்.
அதில் கடுப்பான பெண்ணொருவர், “உங்க தங்கச்சி எதிர் தரப்பில் உட்கார்ந்து இருந்தால் நீங்க இந்த வார்த்தை சொல்லுவீங்களா? உங்க தங்கச்சியும் இதுபோல விவாகரத்து வாங்கி இருக்காங்க, அவங்களோட சொந்த பையனே அவங்கள பார்க்க வரும் போது அக்கம் பக்கத்தினர் அவங்க ரெண்டு பேரையும் இணைத்து பேசினாங்கன்னா அது சரின்னு நீங்க சொல்லுவீங்களா?..” என கேட்கிறார்.
இதனை தொடர்ந்து குறித்த நபர் தொகுப்பாளரால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். விவாகரத்திற்கு பின்னர் எமது சமூகத்தில் உள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதனை குறித்த எபிசோட் வழியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |