2025-ல் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரழிவுகள்... பாபா வங்காவின் பகீர் கிளப்பும் கணிப்பு
2025ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்பு தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பாபா வங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.
கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது.
பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார்.
பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது. இதனால் இவருடைய கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது பாபா வங்காவின் 2025 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் 2025 ஆம் ஆண்டு நிச்சயம் நடக்கும் என பாபா வங்கா கணித்துள்ள சில முக்கிய விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐரோப்பாவில் மோதல்
2025 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புகளில் முக்கிய மிகவும் அச்சுறுத்தலாக இருப்பது ஐரோப்பாவில் ஒரு பெரிய அளவிலான நடக்கும் என்பதுதான்.
தற்போது இடம்பெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் மோதல் பேரழிவுகளை ஏற்படும்தும் என பெரும்பாலான மக்களால் நம்பப்டுகின்றது.
அதுமட்டுமன்றி அணுஆயுத மோதல்கள் ஏற்படலாம் எனவும் பாபா வாங்காவின் கணிப்பில் குறிப்பிடப்படுகின்றது. தற்போது இடம்பெற்று வரும் நாடுகளுக்கிடையிலான மோதல்கள் இந்த கணிப்புகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது.
சைபர் தாக்குதல்
2025 ஆம் ஆண்டில் நீர், ஆற்றல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை குறிவைத்து ஒரு ஒருங்கிணைந்த சைபர் தாக்குதல் ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
இணையத்தால் தற்காலத்தில் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றமை இந்த தாக்குதல் குறித்து இன்னும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
சுற்றுச்சூழல் பேரழிவுகள்
பாபா வங்காவின் கணிப்புகளின் பிரகாரம் 2025 இல் இயற்கை சீற்றங்களால் அதிக அழிவுகளை உலகம் சந்திக்கும்.
மேலும் பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக பேரழிவு தரும் வறட்சி, காட்டுத்தீ மற்றும் புயல்கள் தோன்றும் எனவும் பாபா வங்காவின் கணிப்பு குறிப்பிடுகின்றது.
ஏலியன்கள் வருகை
பாபா வங்கா 2025 ஆம் ஆண்டுக்குள் பூமிக்கு தொடர்பில்லாத புதிய உயிரினங்களின் வருகை நிகழும் என பாபா வங்கா கணித்துள்ளார்.
அவரது கணிப்பின் அடிப்படையில் ஏலியன்கள் பூமிக்கு வருகைதந்து, தங்கள் இருப்பை மனிதகுலத்திற்கு உறுதிப்படுத்துவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு மற்றும் பயம் பெரும்பாலான மக்கள் மத்தியில் நிழவுகின்றது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
மருத்துவ உலகில் பாரிய முன்னேற்றம் 2025 ஆம் ஆண்டில் நிகழும் என பாபா வங்கா கணித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான கணிப்புகளில் சாதகமான ஒரே கணிப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றியது தான் இந்த சிகிச்சை மூலம் பல்வேறு உயிர்கள் காப்பாற்றப்படும் என கணித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |