பரபரப்பாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 - செட்டில் ஒருவர் விபரீத முடிவு
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கியப் பொறுப்பு இருக்கும் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 8
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இதுவரையில், நடந்த எவிக்ஷன்களில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, சிவக்குமார் ஆகிய 7 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது. இதற்கு போட்டியாளர்களுடன் இணைந்து பிக்பாஸ் ஊழியர்களும் தான் என தகவல்கள் கூறுகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 20 போட்டியாளர்களை வைத்து நடத்தப்பட்டாலும் அவர்களை கண்காணிக்கு நூற்றுக்கணக்கான கேமராக்கள் உள்ளே வைக்கப்பட்டுள்ளன. அவர்களை நிர்வகிக்க தனி டீம், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், அசோசியேட் இயக்குனர்கள் என 500க்கும் மேற்பட்டோர் உள்ளே வேலைப்பார்க்கின்றனர்.
விபரீத முடிவுக்கு என்ன காரணம்?
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8 செட்டில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர் நேற்று மாலை வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அவரின் இந்த மரணச் செய்தி பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளதுடன் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனை செய்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் ஸ்ரீதரின் தற்கொலை தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |