சிவகுமார் எவிக்ஷனில் நடந்த துரோகம்... ஆனந்தி வெளியேற்றப்படாதது ஏன்?
பிக்பாஸ் வீட்டில் குறைவான வாக்குகள் பெற்ற ஆனந்தி சாச்சனா ஏன் வெளியேற்றப்படவில்லை என கேள்வி எழுந்து வருகின்றது.
பிக்பாஸ் 8
பிரபல டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 கடந்த மாதம் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமினேட் செய்யப்பட்டு, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ- என்றி கொடுத்தார்.
வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்களாவது பிக்பாஸ் வீட்டினை சுவாரசியமாக மாற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் நிகழ்ச்சியை இன்னும் சொதப்பி வருவதாக கூறப்படுகின்றது.
பிக்பாஸ் மீது மக்கள் மத்தியில் இருந்த விருப்பத்தை தற்போது இருப்பவர்கள் இல்லாமல் செய்து வருகிறார்கள்.
சிவக்குமார் எவிக்ஷனில் நடந்தது என்ன?
இந்த நிலையில், கடந்த வாரம் குறைவான வாக்குகளை ஆனந்தி மற்றும் சாச்சனா பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவர் வெளியேறுவார் என எதிர்பார்த்த போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சிவக்குமார் வெளியேற்றப்பட்டார்.
நாமினேஷன் பட்டியலில் உள்ள மற்ற போட்டியாளர்கள் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் காப்பாற்றப்படுவார்கள் என கூறினாலும் குறைவான வாக்குக்களை பெற்று கடந்த இரண்டு வாரங்களாக ஆனந்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்.
இது குறித்தும், சிவாஜி கணேசன் போல் வசனம் எல்லாம் பேசிக்காட்டி, பலரை ஈர்த்த அவரது பேரன் சிவகுமார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது ஏன் எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |