வீட்டில் ஒரு எலுமிச்சை இருக்கா? கேஸ் அடுப்பு புதிது போல பளபளக்கும்
வீட்டில் உள்ள கேஸ் அடுப்பு துருப்பிடித்தோ அல்லது மங்கலாக இருந்தாலோ ஒரு எலுமிச்சை அதற்கு தீர்வாக இருக்கும்.
கேஸ் அடுப்பு சுத்தம்
வீட்டில் நாம் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டிய ஒரு பொருள் கேஸ் அடுப்பு தான். தற்போது எல்லோருடைய வீடுகளிலும் கேஸ் அடுப்புகள் உள்ளன. இதை சமையலுக்கு தினமும் பயன்படுத்துவதால் எண்ணெய், கிரீஸ் போன்ற விடாப்பிடியான கறைகள் அதில் படித்திருக்கும்.
இதை ஒழுங்காக சுா்ாமாக்கவில்லை என்றால் அடுப்பு சில நேரங்களில் துருப்பிடிக்க சேரிடும். தனது பளபளப்பை இழக்கும். இப்படி இருந்தால் அதிக நாட்களுக்கு அடுப்பு பாவிக்காது.
அவற்றை அகற்றுவதற்கு ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் கிடைக்கக்கூடிய சில பொருட்களை பயன்படுத்தி அடுப்பை மீண்டும் புதியது போல மாற்றலாம். அந்த பொருட்கள் பற்றி பார்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் உப்பு
கேஸ் அடுப்பில் இருக்கும் விடாப்பிடியான கிரீஸை அகற்ற சிரமமாக இருந்தால் எலுமிச்சை மற்றும் உப்பு பயன்படுத்தலாம் இதற்கு ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒரு துண்டின் மீது சிறிதளவு உப்பை தூவி எலுமிச்சை தோலை வைத்து கேஸ் அடுப்பில் இருக்கும் கிரீஸ் பகுதிகளை அழுத்தி தேய்க்க வேண்டும்.
எலுமிச்சையில் இருக்கும் அசிட்டிக் அமிலமும், உப்பின் சிராய்ப்பு பண்பும் விடாப்பிடியான கிரீஸ் முற்றிலுமாக நீக்கிவிடும். பின்னர் ஈரமான துணியைக் கொண்டு கேஸ் அடுப்பை துடைத்தால் பளபளப்பாக இருக்கும்.

வினிகரும் பேக்கிங் சோடாவும்
கேஸ் அடுப்பை சுத்தம் செய்வதற்கு வினிகர் மற்றும் பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். இதற்கு முதலில் கேஸ் ரெகுலேட்டரை கழற்ற வேண்டும்.
பின்னர் அதிலிருந்து பர்னர்களை அகற்ற வேண்டும். இப்போது அடுப்பின் மேற்பரப்பில் பேக்கிங் சோடாவை தூவவும். பின் சிறிதளவு வெள்ளை வினிகரையும் சேர்க்கவும்.
இந்த இரண்டு கலவையானது அடுப்பில் இருக்கும் விடாப்படியான கிரீஸ் மற்றும் எண்ணெய் கறைகளை மென்மையாக்கி விடும்.
10 நிமிடங்கள் கழித்து பல் துலக்கும் பிரஷ் கொண்டு அடுப்பை மெதுவாக தேய்க்க வேண்டும். பின்னர் ஈரமான துணியால் துடைக்கவும். இப்போது பார்த்தால் கேஸ் அடுப்பு புதுசு போல இருக்கும்.

சூடான தண்ணீரும், பாத்திரம் கழுவும் லிக்விடும்
கேஸ் அடுப்பில் இருக்கும் தட்டுகள், பர்னர்கள் சுத்தம் செய்வதற்கு பாத்திரம் கழுவும் லிக்விட் மற்றும் சூடான நீர் பயன்படுத்தலாம்.
இதற்கு ஒரு வாளியில் சூடான நீரை ஊற்றி அதில் சில துளிகள் பாத்திரம் கழுவும் லிக்விடை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்போது அதில் தட்டுக்கள் மற்றும் பர்னர்களை போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு பிரஷ் பயன்படுத்தி அதில் படிந்திருக்கும் அழுக்குகளை கழுவவும். இப்படி செய்தால் அடுப்பு பளபளப்பாக இருக்கும்.
கேஸ் அடுப்பை சுத்தம் செய்த பின் அடுப்பின் மீது சில துளிகள் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவி ஒரு உலர்ந்த துணியை பயன்படுத்தி மெதுவாக துடைக்க வேண்டும். இப்படி செய்தால் கேஸ் அடுப்பு புதியது போல பளபளக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |