அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்.. அதிர்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள்- இனி நடக்க போவது என்ன?
அதிரடியாக இன்று காலையில் அனன்யா வீட்டிற்குள் வருகை தந்துள்ளார்.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 97 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.
முதல் ஆளாக உள்ளே வந்த பிரபலம்
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இறுதி வாரத்திற்கான டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.
இது ஒரு புறம் இருந்தாலும் வெளியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான வொர்ட்டிங் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களில் இந்த வாரத்தின் இறுதியில் ஒரு போட்டியாளர் எவிக்ட்டாக வேண்டும்.
அதன்படி, மிட் வீக் எவிக்ஷன் நடந்தால் விஜய் வர்மா அல்லது மணி வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படியொரு நிலையில் இன்றைய தினம் காலையில் முதல் ஆளாக அனன்யா மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார். இவரை பார்த்த அணைவரும் காலையில் ஷாக்காகியுள்ளனர்.
அத்துடன் யாருக்கு வெளியில் சர்ப்போர்ட் அதிகமாக உள்ளது என தெரிந்து கொள்ள போட்டியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |