வாழ்க்கையில் மர்மமாக இருக்கும் ராசியினர்... இவங்க நினைக்கிறதை கண்டுபிடிக்கவே முடியாது
பொதுவாக ஒவ்வொரு ராசியினருக்கும் தனித்துவமான குணங்கள் காணப்படும். சிலருக்கு ஆளுமை, சிலருக்கு எதிலும் வெற்றி பெறும் முயற்சி என அடுத்தடுத்து கூறிக்கொண்டே செல்லலாம்.
அந்த வகையில் சில ராசியினர் மனதில் நினைப்பதை வெளியே இருப்பவர்கள் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மர்மமாகவே வைத்திருப்பார்கள். அவ்வாறான ராசியினர் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் மிகவும் உணர்ச்சிவசப்படுவதுடன், தீவிரமான இயல்புக்கு பெயர் பெற்றவர்களும் ஆவார்கள். சுதந்திரமாக இருக்கும் இவர்கள் தங்களின் உணர்ச்சிகளை பாதுகாப்பாகவே வைத்துக்கொள்வார்கள்.
இதனால் மற்றவர்கள் இவர்களின் உண்மை உணர்வுகளை புரிந்து கொள்வது சவாலான காரியமாகும். காந்தத்தை போன்று ஈர்க்கும் வசீகர தன்மை கொண்ட இவர்கள் மற்றவர்கள் மறைக்கும் உண்மையை எளிதில் வெளியே கொண்டு வரும் சாமர்த்தியம் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். தங்களது வாழ்க்கையை ரகசியமாகவும், மர்மமாகவும் நடத்துவார்களாம்.
மகரம்
மரக ராசியினர் விடா முயற்சியும், லட்சியமும் கொண்டு வெற்றி பெறுவதில் சிறந்தவர்கள் மட்டுமின்றி தங்களது உணர்வை வெளிக்காட்டாமலும், மற்றவர்களை புகார் செய்யாமலும் தனது கஷ்டத்தை தாங்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களது தனிப்பட்ட விடயங்களையும், கனவுகளையும் வெளிக்காட்டாமல் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இவர்களின் சிறந்து விரும்புவதற்கு உந்து சக்தியாக இருக்கும் விடயத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசியினர் வாழ்க்கையில் விசித்திரமான மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையை செயல்படுத்தும் இவர்கள் மர்மமாகவே இருப்பார்கள்.
சுதத்திரமான மனப்பான்மை கொண்ட இவர்கள், தங்களது நகர்வினால் மற்றவர்களை அதிகமாக சிந்திக்க வைப்பார்கள். ஆதலால் கணிக்க முடியாத இவர்களிடமும் பல மர்மங்கள் நிறைந்திருக்கும்.
மீனம்
அதிக கனவு காண்பவர்களாக இருக்கும் மீன ராசியினர், சொந்த கற்பனை உலகில் வாழ்ந்து வருவார்கள். இவர்கள் என்ன நினைக்கிறார்கள் இவர்களின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை யாராலும் யூகிக்க முடியாது.
பல புதிர்களையும், மர்மங்களையும் தங்களுக்குள் மறைத்து வைத்திருப்பதுடன், ஆன்மீக மற்றும் கண்ணுக்கு தெரியாத சக்தியுடன் இணைந்து தனது செயல்களை செய்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |