பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் சூப்பர் சிங்கர் பிரபலத்தின் மனைவி - ஷாக்கில் ரசிகர்கள்
பிக் பாஸ் தமிழ் ஐந்து சீசன்கள் முடிவடைந்து விரைவில் 6வது சீசன் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் 6 வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது கசிந்து வருகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜலட்சுமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ராஜலட்சுமியின் கணவர் செந்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்றவர். அதே நிகழ்ச்சியில் இவரும் போட்டியாளராக இருந்தார்.
இவருவரும் பிரபலமாக இருக்கும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.