மீண்டும் மணப்பெண்ணான வாரிசு பட நடிகை.. மாலையுடன் வெளியான படம்
அதிகாரப்பூர்வமாக கணவரை விவாகரத்து செய்த நடிகை சம்யுக்தா சண்முகநாதன், இன்றைய தினம் மறுமணம் செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ்.
சுமாராக 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும்.
Ethirneechal: துப்பாக்கி முனையில் ஜனனி... சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட சக்தி! பரபரப்பான ப்ரொமோ காட்சி
கடைசியாக பிக்பாஸ் 8வது சீசன் முடிவுக்கு வந்தது, இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமாகி இருக்கிறார்கள். அப்படி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் தான் நடிகை சம்யுக்தா.

இன்று திருமணம்
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சம்யுக்தா, பெற்றோர் விருப்பப்படி கார்த்திக் சங்கர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ராயன் என்ற மகன் ஒருவரும் உள்ளார்.
கொரோனா காலப்பகுதியில் சம்யுக்தாவின் கணவர் துபாயில் இருந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த விஷயம் தெரியவந்துள்ளது. இதனால் தன்னுடைய கணவருடன் இனி வாழ முடியாது என விவாகரத்து செய்ய முடிவு செய்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா, பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தின் மகன் அனிருதா ஸ்ரீகாந்தை காதலித்து இன்றைய தினம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமணத்தில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர். சமியுக்தாவை போன்று அனிருதா ஸ்ரீகாந்த்தும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |



