நயன்தாரா பானியில் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்.. குவியும் வாழ்த்துக்கள்
நடிகை சாக்ஷி அகர்வால் அவருடைய சிறு வயது நண்பரை காதலித்து கரம்பிடித்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை சாக்ஷி அகர்வால்
ஐடி துறையில் பணியாற்றி வந்த சாக்ஷி அகர்வால், மெல்ல மெல்ல மாடலிங் துறையில் கால் பதித்து அதன் பின்னர் நடிகையாக உருவெடுத்தார்.
இயக்குனர் அட்லி நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, நடிப்பில் வெளியான “ராஜா ராணி” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதன் பின்னர் சாக்ஷி அகர்வாலுக்கு வலுவான வேடத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து தன்னை அடையாளப்படுத்தக்கூடிய திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.
கவினை காதலித்தாரா?
அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “காலா” திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்திருப்பார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “விசுவாசம்” படத்திலும் நயன்தாராவின் தோழிகளில் ஒருவராக நடித்திருப்பார்.
சினிமாவில் கொடிக்கட்டி பறக்க நினைத்த பொழுது பிக்பாஸ் வாய்ப்பு வர, அதிலும் கலந்து கொண்டு கவினுடன் இணைத்து பேசப்பட்டார்.
பின்னர் கவின் லாஸ்லியாவுக்கு ரூட்டு விட்டதால், அவர் மீது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திய சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் விளையாடி வந்தார். இதன் விளைவாக 49-ஆவது நாளிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
திருமணம்
இந்த நிலையில், அரண்மனை 3, நான் கடவுள் இல்லை, பகீரா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போன்று அதர்ம கதைகள், கெஸ்ட் சாப்டர் 2, தி நைட், என மூன்று படங்களில் கமிட்டாகி இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் நேரத்தில் நடிகை சாக்ஷி அகர்வால், அவருடைய சிறுவயது நண்பரான நவநீத் என்பவரை காதலித்து கரம் பிடித்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |