சினிமாவுக்கு பிரேக் கொடுத்து விட்டு கணவருடன் சுற்றுலா சென்ற அபர்ணா தாஸ்- வைரலாகும் படங்கள்
நடிகை அபர்ணா தாஸ் கணவருடன் ஹனிமூன் சென்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை அபர்ணா தாஸ்
தமிழ் சினிமாவில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அபர்ணா தாஸ்.
இந்த திரைப்படம் அபர்ணா தாஸுற்கு ஒரு முக்கிய இடத்தை பிடித்து கொடுத்தது.
இதனை தொடர்ந்து சின்னத்திரை நடிகர் கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பெரிய அளவில் வெற்றியடைய அடுத்தடுத்து இவர் தொடர்ந்தும் சினிமாவில் ஈடுபாடு காட்டுவார் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஹனிமூன் சென்ற படங்கள்
இந்த நிலையில், நடிகை அபர்ணா தாஸ் மலையாள நடிகர் தீபக் பரம்போல் என்பவரை காதலித்து வந்தார். தற்போது திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர், சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தீபக் பரம்போல்- அபர்ணா தாஸ் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளா வடக்கஞ்சேரியில் உள்ள தேவர்காட் கன்வென்ஷன் சென்டரில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அபர்ணா தாஸின் ஹனிமூன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “என்ன சினிமாவுக்கு பிரேக்கா?” என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவர்கள் ஹனிமூனுக்காக தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் உள்ள பாலிக்கு சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |