பிக்பாஸ் வின்னர் ராஜுவிற்கு அடித்த அதிர்ஷ்டம்... தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ராஜு படம் ஒன்றில் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5ல் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக மாறியவர் தான் ராஜு ஜெயமோகன்.
குறித்த நிகழ்ச்சியில், தனது இயல்பான நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி, ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்திய ராஜூ தற்போது கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார்.
சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கும் இந்த படத்தினை ராகவ் மிர்தாத் இயக்குகின்றார். பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆதியா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு 'பன் பட்டர் ஜாம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதை என்ன?
இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும், Gen Z இளைஞர்களைப் பற்றிய கதைதான் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் கூறுகையில், ஒருவரை சுற்றி எத்தனை பிரச்சனைக்ள இருந்தாலும், அந்தந்த தருணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவு இருக்காது என்ற பாசிட்டிவ்வான கருத்தையும், நகைச்சுவையையும் கொண்டுள்ளது. வரும் ஜூலை 8 ஆம் தேதி இப்படத்தின் முதல் பார்வை வெளியாக உள்ளதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |