அந்த தவறை தெரியாமல் செய்துவிட்டேன்... உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா தான் செய்த தவறை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா கடந்த 2010ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இப்படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமான இவர் இன்று மக்கள் மத்தியில் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார் நடிகை சமந்தா.
பின்பு முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சூர்யா என நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவர்,தெலுங்கு, ஹிந்தி மொழியிலும் நடித்து வருகின்றார்.
இவர் கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு பட நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
தவறை நினைத்து வருந்தும் சமந்தா
அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அவ்வப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார். சுமார் ஒரு வருட காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க முடிவு செய்திருக்கும் சமந்தா, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதின் முக்கியத்துவம் குறித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் சமந்தா ஆரோக்கியமற்ற உணவு பிராண்ட் ஒன்றில் விளம்பர தூதராக இருந்தது குறித்து நபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு சமந்தா பதில் அளிக்கையில், கடந்த காலத்தில் அந்தத் தவறை செய்தது உண்மைதான். ஆனால் அந்த தவறை நான் வேண்டும் என்றே செய்யவில்லை. அது தெரியாமல் செய்த தவறு. ஆனால், உண்மை தெரிந்த பிறகு அதுபோன்ற விஷயங்களை விளம்பரப்படுத்துவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன் என்றும் தற்போது தற்போது விழிப்போடு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |