திருமண கோலத்தில் நடிகை ஜுலி... மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகை ஜுலி தற்போது பிரபல சீரியலில் நடித்து வரும் நிலையில், இதில் ஏற்கனவே திருமணமானவரை திருமணம் செய்து கொள்ள பல சதிவேலைகளை செய்து வருகின்றார்.
பிக்பாஸ் ஜுலி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்தவர் தான் நடிகை ஜுலி.
இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமான நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். அங்கு இவரது உண்மை குணத்தினை அவதானித்த மக்கள் இவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர்.
பின்பு மெல்ல மெல்ல ரசிகர்களின் மனதை மாற்றி ரிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்து தற்போது நடிகையாக மாறியுள்ளார்.
சினிமா வாய்ப்பிற்காக பல புகைப்படங்களை எடுத்து வெளியிட்ட ஜுலி, தற்போது சீரியலில் நடித்து வருகின்றார். ஆம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வழக்கறிஞராக வலம்வரும் இவர், மோசமான வில்லியாகவும் வலம்வருகின்றார்.
சீரியலில் திருமணமான நடிகரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பல சதி வேலைகளை செய்து வருகின்றார்.