மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி
“மைனர் வேட்டி கட்டி..” என்ற பாடலுக்கு மார்டன் ஆடையில் நச் என ஒரு குத்தாட்டம் போட்ட ஜனனி வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் ஜனனி இலங்கையில் என்ன செய்தார் தெரியுமா?
இலங்கையில் பிறந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர் தான் ஜனனி.
இவர் ஆரம்ப காலங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் இருந்து வந்தார். இவரின் தீவிர முயற்சியால் பிக் பாஸ் சீசன் 6ன் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
இவரின் இந்த முயற்சியால் தமிழகம் மட்டுமல்ல பிக் பாஸ் தமிழ் பார்த்து கொண்டிருக்கும் பலக் கோடி ரசிகர்கள் மனதை வென்றார்.
இலங்கை பெண்ணிற்கே ஒரு தனி அழகு இருக்கிறது என அனைவரும் பேசும் அளவிற்கு இவரின் செயற்பாடுகள் இருந்து வருகிறது.
ரீல்ஸ்களை தெறிக்கவிடும் ஜனனி
இந்த நிலையில் ஜனனி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஜனனி இத்துடன் நிறுத்தாமல் ரீல்ஸ், போஸ்ட் என்று பிஸியாகவும் இருந்து வருகிறார். இவரின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமான ஷேர் செய்யப்படுகிறது.
மேலும் ஜனனியின் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறார்கள்.
அந்தவகையில், “மைனர் வேட்டி கட்டி” என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சி பார்த்து, “ஜனனி நடிப்பிற்க வர வர ரசிகர்கள் கூடி கொண்டே போகிறார்கள்.” என கமண்ட் செய்து வருகிறார்கள்.
