அடடே நம்ம ஜனனியா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மார்டன் லுக்கிற்கு மாறிய புகைப்படம் இதோ!
மார்டன் ஸ்டைலில் கோட் சூட்டுடன் போஸ் கொடுக்கும் ஜனனி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் ஜனனி
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி.
இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது, அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார்.
அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது.
ஒரு கட்டத்தில் ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
மார்டனாக மாறிய ஜனனி
இந்த நிலையில் பிக் பாஸை விட்டு வெளியேற்றப்பட்டாலும் ஜனனி அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் கோட் சூட் போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி போயுள்ளார் ஜனனி.
மேலும் ஜனனியின் இந்த மாற்றத்தை அவருடைய ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில் இவரும் லாஸ்லியா போல் ஆகிவிடுவாரோ என்ற பயமும் வர ஆரம்பித்துள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள்,“ நல்லா இருந்த ஜனனியை யார் இப்படி செய்தது”என கமண்ட் செய்து வருகிறார்கள்.