இலங்கை பெண் ஜனனியை அதிரடியாக சிறைக்கு அனுப்பிய பிக் பாஸ் - கொதித்து எழுந்த போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனி கதறி அழுத ப்ரோமோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
இந்த வாரத்தில் வொர்ஸ்டாக இருந்தது போட்டியாளர்கள் யார் யார் என்று பிக் பாஸ் கேள்வி எழுப்பினார்.
கதறி கதறி அழுத ஜனனி
ஏடீகே, அசீம், விக்ரமன் எல்லோரும் ஜனனியை கூற கடுப்பில் கத்தி அழுகின்றார். நானே சிறைக்கு செல்லுகிறேன்.
யாரும் விவாதம் செய்யாதீர்கள் என்று கதறி கதறி அழுகின்றார்.
பிறகு ஆறுதல் கூறிய பிக் பாஸ் போட்டியாளர்கள் ஜனனியை பேசும் படி கூறுகின்னர்.
ஜனனி நான் நன்றாக விளையாடுவேன். பாடசாலையில் படிக்கும் போது நான் சிறந்த விளையாட்டு வீராங்கனை. நான் எல்லோருடனும் இருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
சிறைக்கு அனுப்பிய பிக் பாஸ்
நான் தனியாக தான் விளையாடுகிறேன் என்று கூறிவிட்டு செல்லுகிறார். ப்ரோமோவை பார்க்கும் போது பெரிய சண்டையாக இருந்தது.
நிகழ்ச்சியை பார்த்தால் தான் உண்மை தெரிகின்றது. அதேபோல இந்த வாரம் ராபட் மாஸ்டரும் வொர்ஸ் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டார்.
எனவே ஜனனி மற்றும் ராபட் மாஸ்டர் இருவரையும் பிக் பாஸ் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.