திருநங்கை செலிபிரிட்டி திருமணம்.. அமலா பாலுக்கு வந்த திடீர் அழைப்பு- நடந்தது என்ன?
ஜான்மோனி- அபிஷேக் திருமணத்திற்கு நடிகை அமலாபாலுக்கு அழைப்பு விடுத்த பொழுது அவர் கொடுத்த பதில், இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜான்மோனி- அபிஷேக்
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான திருநங்கை மேக்கப் கலைஞர் தான் ஜான்மோனி.
இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் மூலம் கவனத்தை ஈர்த்தவர். பிரபல ஒப்பனை கலைஞராகவும் மாடலிங் துறையிலும் பணியாற்றி வருகிறார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜான்மோனி, கேரளாவிற்கு வந்ததிலிருந்து பிரபல மேக்கப் கலைஞர்களிடையே கவனத்தை தன்வசம் திருப்பியுள்ளார். திருநங்கையான ஜான்மணி, ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் செயல்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அபிஷேக் மற்றும் ஜான்மோனி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் பெரிதாக பேசவில்லை என்றாலும், வெளியில் வந்தவுடன் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
அதன் பின்னர், அபிஷேக் மற்றும் ஜான்மோனி காதலிப்பது போன்ற கிசுகிசுக்கள் சில காலமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தன.
திருமணம்
இவ்வளவு பிரபலமாக இருக்கும் ஜான்மோனி, அபிஷேக் ஜெய்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
தற்போது பேசப்படும் ஜோடியாக மாறியுள்ள இவர்கள் புகைப்படங்களில் திருமண உடையில் கழுத்தில் துளசி மாலை அணிந்திருக்கிறார்கள்.
புகைப்படங்களுடன் ஜான்மோனி, "ஜான்மோனியும் அபிஷேக்கும் இறுதியாக ஒன்று" என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார்.
அமலா பால் கொடுத்த பதில்
இது குறித்து அவர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலில், "நீங்கள் ஒன்றாக வாழ்கிறீர்கள் என்று நிறைய கிசுகிசுக்கள் வந்தனவா?" என்று கேட்டபோது, தம்பதிகள், “ இந்த திருமணம் தான் அத்தகைய கிசுகிசுக்களுக்கு பதில்..” என தைரியமாக பதில் கொடுத்துள்ளனர்.
மேலும், உங்கள் திருமணத்திற்கு ஒரு பிரபலத்தை நேரில் அழைக்க முடியுமா என்று தொகுப்பாளர் கேட்டபோது, அதற்கு ஜான்மோனி “அமலா பாலை திருமணத்திற்கு அழைத்து, கட்டாயம் வர வேண்டும் என்று சொல்ல, அதற்கு அமலாவும் “ஜான்மோனியை நீங்கள் ஹனிமூனை அனுபவியுங்கள்..” எனக் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |