நன்றியுணர்வு துளியும் இல்லாத 3 ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை!
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருமே மற்றவர்களுக்கு தாங்கள் செய்யும் உதவிகளுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது இயல்பு.
ஆனால் நாம் மற்றவர்கள் செய்த உதவிகளுக்கு மதிப்பளிகின்றோமா?,நன்றியுணர்வுடன் இருக்கின்றோமா என்று பெரும்பாலானவர்கள் சிந்திப்பதே கிடையாது.

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பிலேயே நன்றியுணர்வு இல்லாதவர்களாக அறியப்படுகின்றார்கள்.
அப்படி மற்றவர்கள் தங்களுக்கு செய்த உதவியையும், காட்டிய அன்னையும் அரவணைப்பையும் நொடியில் மறந்துவிடும் நன்றியில்லாத குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தின் மறு உறுவமான அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் தங்களின் சுதந்திரத்துக்கும், இலக்குகளுக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அவர்களின் விடாமுயற்சியும், எதையும் சாதிக்கும் குணமும், அவர்கள் சந்திக்கும் அனைத்து சவால்களையும் தங்கள் சொந்த முயற்சியால் மட்டுமே வென்றதாக நினைக்கின்றது. அதனால் இவர்களுக்கு உதவும் யார் பற்றியும் இவர்கள் பெரிதாக நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இவர்களிடம் காணப்படும் இந்த மனபான்மை சில சமயங்களில் மற்றவர்கள் செய்த உதவியை எளிதில் மறந்துவிடுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இவர்கள் வேண்டும் என்றே இவ்வாறு நடந்துக்கொள்ளவில்லை என்றாலும், இவர்களிடம் நன்றியுணர்வு அரிதாகவே இருக்கும்.
மிதுனம்

இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்ற மிதுன ராசியினர் எந்த தனிப்பட்ட விடயங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். மேலும் இவர்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பவாதிகளாக மாறிவிடுகின்றார்கள்.
இவர்களின் இந்த குணம் காரணமாக மற்றவர்கள் செய்யும் உதவிகள் பற்றி இவர்கள் மீண்டும் வாழ்வில் ஒருபோதும் சிந்தித்துப்பார்க்கவே மாட்டார்கள்.
இவர்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்ட உடனேயே அதற்கு உதவிய அனைவரையும் தூக்கியெறியும் குணம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
சிம்மம்

அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் எல்லா விடயங்களிலும் தங்களுக்கான அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
அவர்களின் தற்பெருமை சில நேரங்களில் மற்றவர்களின் உதவியை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள இடமளிக்காது.
எனவே இவர்கள் மற்றவர்களின் உதவியால் வாழ்வில் முன்னனேற்றம் அடைந்தாலும் அதற்கு ஒருபோதும் நன்றி சொல்ல வேண்டும் என்று சிந்திக்கவே மாட்டார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |