பிக்பாஸ் வாட்டர் மெலன் ஸ்டாருக்கு மூன்று கல்யாணமா? அவரே கொடுத்த விளக்கம்
பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இடம் பெற்றிருந்த திவாகர், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளிறேற்றப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு ஏற்கவே திருமணம் ஆகிவிட்டது என ஒரு புகைப்படம் இணையத்தில் படு வைரலானது. இது குறித்து அவரே சமீபத்திய பேட்டியொன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் -9
கடந்த அக்டோபர் ஐந்தாம் திகதி பிரம்பமாண்டமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தொடக்கத்தில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகின்றது.

அதில் முக்கிய போட்டியாளராக களமிறங்கியவர் தான் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் இவர் தன்னை தானே நடிப்பு அரக்கன் என சொல்லிக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் செய்த சேட்டைகள் மக்கள் மத்தியில் பிரபலமானது. மேலும் விஜய் சேதுபதி போல நன்றாக நடிக்கிறேன் என அவர் சொன்னதும் இணையத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

திருமண சர்ச்சை
தொழில் ரீதியாக தன்னை ஒரு மருத்துவர் என்று சொல்லும் திவாகர், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பலமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியலும் ஒரு சில பேட்டிகளிலும் குறிப்பிட்ருக்கின்றார்.
ஆனால், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகி, சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலானது..இதில் அவர் மணக்கோலத்தில் இருப்பது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு மூன்று முறை திருமணம் நடந்துள்ளது என்ற ஒரு தகவலும் வைரலானது.

திவாகர் கொடுத்த விளக்கம்
சமூக வலைதளத்தில் தன்னை பற்றி பரவிய திருமண சர்ச்சைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது திவாகர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
அவர் குறிப்பிடுகையில், "என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நிறையத் தவறான தகவல்கள் சில யூடியூபர்களால் பரப்பப்படுகிறது.

நான் மூன்று திருமணம் எல்லாம் செய்யவில்லை, தனியாக தான் வாழ்ந்து வருகிறேன். மேலும் இது போன்ற தவறான தகவல்களை பரப்புவோருக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |