அஸீமின் வெற்றிக்கு பின்னால் இருந்து வேலை பார்த்த ஹேஷ் டேக்! திரைக்கு வந்த சில பித்தலாட்டங்கள்
பிக் பாஸ் சீசன் 6 ன் டைட்டில் வின்னர் அசீம் தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு செய்த பித்தலாட்டங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன்6 கடந்த மாதம் தான் நிறைவடைந்துள்ளது.
ஆனாலும் இன்று வரை அதன் தாக்கம் இருந்து வருகிறது. மேலும் இந்த சீசனில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்ட நிலையில் மிகவும் விறுவிறுப்பாக 106 நாட்கள் நடந்தது.
இதில் பல பிரபலங்கள் கிழித்தெறிப்பட்டாலும் மக்களால் அதிகம் வரவேற்கப்பட்ட சிலரின் முகங்கள் கடைசி வரை யாருக்கும் தெரியாமலே சென்று விட்டது.
இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துக் கொண்டார்கள். அசீமிற்கு டைட்டில் வின்னர் பட்டம், ஒரு கார், 50 இலட்சம் பணம் என்பன பரிசாக வழங்கப்பட்டது.
டைட்டில் வின்னர் குறித்து எழும் சர்ச்சைகள்
இந்த நிலையில் அசீமிற்கு குறித்த தொலைகாட்சி டைட்டில் வின்னர் கொடுத்தது தொடர்பில் பல சர்ச்சையான விடயங்கள் வாக்குவாதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
மேலும் வி்க்ரமன் தான் டைட்டில் வின்னருக்கு தகுதியானவர் என்று பல இடங்களில் பல பிரசாரங்கள் செய்து வரும் நிலையில் அசீமின் வெற்றிக்கு என்ன காரணம் என விமர்சகர்கள் உட்பட ரசிகர்களும் தேடி வருகிறார்கள்.
மேலும் இதன் கோபமடைந்த அசீமும் பல இடங்களில் தன்னுடைய வாய்க்கு வந்தப்படி எல்லாம் பேசி வருகிறார். இதனை தொடர்ந்து சிறிது நேரம் சென்ற பின்னர் வேறொரு வீடியோ மன்னிப்பும் கேட்டு வருகிறார்.
ஹேஷ் டேக் ட்ரெண்டிங்
இந்த நிலையில் அசீமின் செய்தி கல சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்த நிலையில் குறிப்பிட்டவொரு “ #AZEEMAPOLOGIZING2AANDAVAR ”ஹேஷ் டேக் ட்ரெண்டிங் வருகிறது.
இந்த ஹேஷ் டேக் பயன்படுத்தியவர்கள் எல்லோரும் சமிபத்தில் டுவிட்டர் பயனர்களானவர்கள் யார் இவர்கள் இந்த ஹேஷ் டேக்கின் பொருள் தான் என்ன? என பல கேள்விகள் எழுந்து வருகிறது.
இன்னும் சிலர் அசீம் தான் ஆள் வைத்து இது போன்று செய்து வருகிறார் எனவும் சில விவாதங்களின் முடிவில் தெரியவருவதாக சில மறைமுக கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
மேலும் அஸீம் PRகளுக்கு லட்சக்கணக்கில் செலவழித்து இப்படி ட்விட்டர் Bots மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொள்கிறார் என ஆராய்ச்சிகள் மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் அசீமின் வெற்றிக்கு பின்னால் இவ்வளவு பித்தலாட்டம் இருக்கிறதா?” என வியப்படைந்துள்ளார்கள்.
#Azeem கு பாஜக ஆதரவா?
— Noorul ibn Jahaber Ali (@nooruljourno) February 11, 2023
அதே டெய்லர்.. அதே வாடகை#TNWelcomesModi ஐ யார் டிரெண்ட் செய்கிறார்கள் என பார்த்தால் ஒரே வடஇந்திய ஐடியாக இருக்கும்#BiggBossTamil அஜீமுக்கு ஆதரவாக #AzeemApologizing2Aandavar ஐ வட இந்தியர்களே பகிர்கின்றனர்#AbuserAzeem #AramVellum #Vikraman #BiggBossTamil6 pic.twitter.com/nUCdqy9EZx