கமல் சார் என் பக்கம் தான்! அசீமின் வெற்றி குறித்து மனதில் உள்ளதை கொட்டித்தீர்த்த விக்ரமன்
கமல் சார் அறம் வெல்லும் என்று என்னுடன் தான் நின்றார், அதுவும் அறத்தின் பக்கம் தான் நின்றார் என தனது மிகப்பெரிய வெற்றி குறித்து நேர்காணலில் விக்ரமன் பேசிய விடயம் தற்போது பரவலாக பேசியிருக்கிறார்.
பிக்பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இதில் 21 போட்டியாளர்களில் ஒருவராக இருந்து இறுதிவரை வந்து விளையாடியவர் தான் விக்ரமன்.
இவர் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் டுவிட்டரில் சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வந்த விக்ரமன், தற்போது பிக்பாஸ் வீட்டிலும் இதையே தொடர்ந்தும் செய்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் எந்த போட்டியாளர்கள் என்ன தவறு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் முதல் ஆளாக இருப்பார் விக்ரமன்.
பிக்பாஸ் நிகழ்விற்குப் பிறகு விக்ரமன் வழங்கிய நேர்காணலில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்தது, கமல் சார் பற்றியும், அசீமின் வெற்றி குறித்தும் சில விடயங்களை பேசியிருக்கிறார்.
அறம் வெல்லும்
நான் வீட்டிற்குள் இருக்கும் போது தேவையான நேரத்தில் அறத்துடனும், அமைதியுடனும் தான் இருந்தேன். டைட்டில் வின்னர் என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என நான் கவலைப்படவில்லை ஆனால் டைட்டில் எனக்கு கிடைக்கும் என நம்பினேன். ஆனால் அதைவிட பெரிய வெற்றி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எனக்கு எதுவுமே தெரியவில்லை.
வெளியில் வந்து பார்க்கும் போது தான் மக்களின் ஆதரவும், அன்பும் எனக்கு தெரிந்தது. அதிலும் பொங்கல் கோலங்களில் கூட அறம் வெல்லும் என போட்டிருந்தது இன்னும் என்னை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
எனக்கு அதுவே பெரிய வெற்றி தான். எங்கள் வீட்டுப்பிள்ளை என எல்லா மக்களும் என்னைக் கொண்டாடுகின்றனர்.
அசீமின் வெற்றி
அசீமின் வெற்றியை நான் ஏற்றுக்கொண்டேனா என்பதை விட என்னுடைய ஆதரவாளர்கள் உண்மையை நம்புபவர்கள், அறத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.இதனை ஏற்றுக்கொண்டார்கள்.
நான் ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் அசீமின் வெற்றி நிறையவே பேசப்பட்டது. பிக்பாஸ் வீட்டிக்குள் இருக்கும் போது அசீம் ஏன் இவ்வாறு நடந்துக்கொண்டார் என்பது அவருக்குத் தான் வெளிச்சம்.
அவரின் வெற்றி ஒரு கோப்பையாகவே மாத்திரம் தான். அவரின் வெற்றி வெற்றி அல்ல வென்றது அறம் தான். அறமே வெல்லும் என கமல்ஹாசன் என்னுடன் தான் நின்றார். 16 வாரங்கள் தொடர்ச்சியாக என்னுடனேயே நின்றார்.
மேலும் இது அரசியல் வாக்கு போல் அல்லாது ஒன்லைனில் வாக்களிப்பார்கள். எனவே, மக்கள் ஆதரவிற்கும் இந்த தீர்ப்பிற்கு தொடர்பு இல்லை என்று நான் நினைக்கிறேன்.
தொடர்ந்தும் நான் எளிய, சமானிய மக்களுக்கு தொடர்ந்தும் அறம் வெல்லும் அறக்கட்டளை நடத்தி என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் எனத் தெரிவித்திருக்கிறார்.