பிக்பாஸ் முடிய இன்னும் 35 நாட்கள் ஆகுமா?அசீம் அவிழ்த்த உண்மையால் அதிர்ச்சியில் போட்டியாளர்
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜிபி முத்து நேற்றைய தினம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், அவரை பீதியடைய வைக்க அசீம் கூறிய காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜிபி முத்து மற்றும் அசீம்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் விருந்தினர்களாக வீட்டிற்குள் வந்துள்ளனர்.
அந்த வகையில் எலிமினேட் ஆகாமல் தானாக வெளியேறிய ஜிபி முத்துவும் நேற்றைய தினத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
இவர் தான் பயன்படுத்திய படுக்கையைப் பார்த்து தனக்கு என்று கூறியுள்ளார். அதனை தற்போது கதிரவன் பயன்படுத்தி வருவதாகவும், நீங்கள் மற்ற படுக்கையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அசீம் கூறியுள்ளார்.
மேலும் நீங்க 35 நாள் உள்ள இருக்க போறதை பத்தி நானும் சொல்ல மாட்டேன். நீங்களும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க" என்று அசீம் கதிகலங்க வைத்துள்ளார்.
இதனை குழப்பத்துடன் பார்க்கும் முத்து,"35 நாள் எதுக்கு" என தனக்கே உரிய பாணியில் கேட்கின்றார். இதற்கு மைனாவும் ஆமாம் என்று கூறி அசீம் உடன் சேர்ந்து கொண்டு கதை கட்டியுள்ளார்.
ஆனால் ஜிபி முத்துவிற்கு பயம் ஒருபுறம் இருந்தாலும், அதை அடக்கிக் கொண்டு தனது ஸ்டைலில் கொமடியில் கலக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது உள்ளே இருக்கும் 6 போட்டியாளர்களில் இந்த வாரம் வெளியேறுவது யார் என்ற கேள்வி மக்களிடையே அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
#Azeem & #GPMuthu fun conversation , GPMuthu back to full form at the end ???❤️ #BiggBossTamil6 #BiggBoss #BiggBossTamil #Azeem? #azeem_army #BB6WinnerAzeem #MakkalNayaganAzeem pic.twitter.com/Fmq2hraisZ
— r.r_11 (@RoyAnth89206971) January 11, 2023