அசீமுடன் கைக்கோர்க்கும் பிக் பாஸ் பிரபலம்! வைரலாகும் வீடியோ காட்சி..
பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமுடன் கூட்டணி சேர்ந்து ரீல்ஸ் செய்ய ஆரம்பித்த தனலெட்சுமியின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7க்காக காத்திருக்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 6 இனிதே சென்ற மாதம் நிறைவடைந்த நிலையிலும் அதன் தாக்கம் இன்றும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
அடுத்த சீசன் எப்போது ஆரம்பிப்பார்கள் என ரசிகர்களும் ஆர்வமான கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் மீடியாத்துறையில் சாதித்த மற்றும் சாதிக்க விரும்பும் நபர்கள் தான் போட்டியாளராக தெரிவுச் செய்யப்படுவார்கள்.
அந்தவகையில் இந்த சீசனுக்கு அசீம், சிவின், விக்ரமன், தனலெட்சுமி, ஜனனி, அமுதவாணன், ராம், ஆயிஷா, மகேஸ்வரி, ஜிபி முத்து, மைனா, ரக்ஷிதா என மீடியாத்துறையிலுள்ளவர்களும் சாதிக்க விரும்புவர்களுமே தெரிவுச் செய்யப்பட்டார்கள்.
இதில் அசீம் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராகவும், விக்ரமன் இரண்டாவது இடமும், சிவின் மூன்றாவது இடமும் பெற்றுக் கொண்டார்கள்.
அசீமுடன் தனலட்சுமி
இந்த நிலையில் அசீம் பற்றிய கருத்துக்கள் மற்றும் அவர் பற்றிய விமர்சனங்களை வெளியேறிய போட்டியாளர்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட துறையிலுள்ளவர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
இது போன்று பிக் பாஸ் வீட்டில் "அசீமை கண்டால் பாம்பு கீரியை கண்டது போல்" இருந்து விட்டு, வெளியில் தனலெட்சுமி அசீமுடன் இணைந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்.
இவரின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் “யார் பக்கம் சாய்ந்தால் நாம் முன்னேறலாம் என்ற விடயத்தில் தனலெட்சுமி மிகவும் கூர்மையாக இருக்கிறார் ”என கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.