பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா? சூடுபிடிக்கும் ஓட்டிங்
பிக்பாஸ் சீசன் 9-ல் இந்த வாரம் அதிரடியாக வெளியேறும் பெண் போட்டியாளர் யாரென்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வழக்கமான சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சூடுபிடிப்பது குறைவாக உள்ளது.
சின்னத்திரை பிரபலங்களை விட இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டுள்ளனர். 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வார இறுதியில் நந்தினி மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என காரணம் காட்டி வெளியேறினார்.

அதன் பின்னர் எவிக்ஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி, அப்சரா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்
இந்த நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷனில், வியானா, பிரவீன், சுபிக்ஷா, துஷார், கலையரசன், ரம்யா ஜோ, அரோரா மற்றும் ஆதிரை ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் மிகக் குறைவான வாக்குகளை பெற்று அரோரா மற்றும் ஆதிரை இருவரும் இருக்கிறார்கள்.

சின்னத்திரை நடிகையான ஆதிரை மக்கள் மத்தியில் அதிகமான வெறுப்பை சம்பாரித்து வருகிறார். எப். ஜேவுடன் செய்யும் காதல் லீலைகள் குறும்படங்களாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளறியுள்ளது.
இவற்றை வைத்து பார்க்கும் பொழுது நிச்சயம் அரோரா மற்றும் ஆதிரை இருவரில் ஒருவர் பெட்டியை தூக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆதிரைக்கு நாளுக்கு நாள் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |