Bigg Boss: ரெட் கார்டுடன் வெளியேறும் பாரு, கம்ருதின்... விஜய் சேதுபதியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் பார்வதி, கம்ருதின் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து விஜய் சேதுபதி செய்த செயல் அனைவரையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதுவரை போட்டியாளர்கள் மட்டுமின்றி மக்களும் எதிர்பார்த்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இந்த வாரம் நடைபெற்று வருகின்றது.
குறித்த டாஸ்க் ஆரம்பித்த நாளிலிருந்து பார்வதி, கம்ருதின் இருவரின் நடவடிக்கையும் மோசமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கார் டாஸ்கில் இவர்கள் நடந்து கொண்டது ஒட்டுமொத்த மக்களையும் கடுப்பில் ஆழ்த்தியது.

ஆம் சாண்ட்ராவைக் காரிலிருந்து கீழே தள்ளிவிட்ட நிலையில், அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.
அவரை கம்ருதின், வினோத், விக்ரம் மூவரும் நன்றாக பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் விஜய் சேதுபதி பாரு, கம்ருதின் செயலுக்கு என்ன பதில் கொடுக்கப் போகின்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சி சரியான பதிலாக இருந்துள்ளது. ஆம் இருவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப தயாராகியுள்ளது. அரங்கமே மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் அரோரா மட்டும் அழுது கொண்டிருக்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |