Bigg Boss 9: பிக்பாஸில் எதிர்பாராத எவிக்ஷன்... வீட்டிற்குள் எண்ட்ரியான விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய தினம் சுபிக்ஷா வெளியேறியுள்ள நிலையில், விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டிற்குள் மாஸ் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் 9 போட்டியாளர்கள் விளையாடி வந்த நிலையில், டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் கடுமையான சண்டை அரங்கேறியது.
இதில் அரோரா டிக்கெட்டை வென்று முதல் பைஃனலிஸ்ட் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று எவிக்ஷன் இல்லை என்று நினைத்த ரசிகர்களுக்கு சுபிக்ஷா வெளியேறியுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நேற்றைய தினம் கம்ரு, பார்வதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து விஜய் சேதுபதி வெளியே அனுப்பியுள்ள நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் மாஸ் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ஆம் டிடிஎஃப் வின்னர் டிக்கெட்டை அரோராவிற்கு கொடுப்பதற்கு உள்ளே சர்ப்ரைஸாக நுழைந்துள்ளார். அரோரா விஜய் சேதுபதியிடம் டிக்கெட்டை வாங்கும் போது, சுபிக்ஷா இல்லாமல் உள்ளதால் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |