சாண்ட்ரா Possessive ஆகல.. திவ்யாவை விட்டுக் கொடுக்காமல் பேசிய பிரஜன்
"சாண்ட்ரா Possessive ஆகல.. திவ்யா நல்ல பொண்ணு, எனக்கு தங்கை மாதிரி" என பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரஜன் கொடுத்த பேட்டி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடும் விவாதங்களுக்கு மத்தியில் ஏழு வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

இதன்படி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் திவாகர், கெமி ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இடையில் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.
திவ்யாவுக்கு ஆதரவு கொடுத்த பிரஜன்
இந்த நிலையில் எட்டாவது வாரம் யார் வெளியேறுவார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.
வாக்குகள் அடிப்படையில், பிரஜன், சாண்ட்ரா இருவரும் குறைவான வாக்குக்களை பெற்று வெளியேற இருந்த நிலையில் பிரஜன் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். வெளியில் வந்த பிரஜன், மேடையில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சாண்ட்ராவிற்கு கொடுத்த அலப்பறைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது குறித்து பேசிய பிரஜன், “ சாண்ட்ரா Possessive ஆகல, அவங்க அவுங்களுடைய விளையாட்டை விளையாடுறாங்க. என்னுடைய விளையாட்டை தான் நான் விளையாடினேன். விஜய் சேதுபதி என்னுடைய நண்பர் என்பதற்காக ஆதரவு வழங்கினார் என்றும் பேசப்பட்டது. ஆனால் நாங்கள் உள்ளே நண்பர்கள் போன்று இல்லை. கணவன்-மனைவியாக உள்ளே செல்லும் பொழுது எங்களை எல்லோரும் ஒரே பார்வையில் தான் பார்த்தார்கள். எவிக்ட்டாகமல் இருந்திருக்கலாம் என்று இன்றும் கருத்துக்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.. ” என மனம் விட்டு பேசியிருந்தார்.
இந்த செய்தி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், “ இனி தான் சாண்ட்ரா விளையாடுவார்..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |