Bigg Boss 9: ரம்யா ஜோ செய்த மோசமான செயல்.. கலவர பூமியாக மாற்றிய திவாகர்
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் திவாகரன் மற்ற போட்டியாளர்கள் விடயத்தில் மூக்கை நுழைப்பதால் கடுப்பில் பிரபலங்கள் கத்த ஆரம்பித்து விட்டனர்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
நேற்றுமுன் தினம் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
கொரட்டை தொல்லை தாங்கல..
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் திவாகரன் செய்யும் அலப்பறைகளை வீட்டிலுள்ள மற்ற போட்டியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இவர் வெளியில் தன்னை தானே விளம்படுத்திக் கொண்டது போன்று உள்ளே சென்றும் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான மற்ற பிரபலங்கள், “ உங்க வேலையை மட்டும் பாருங்க..” எனக் கண்டித்துள்ளனர்.
ஆனாலும் அடங்காத திவாகரன் காலையில் எழுந்து வந்தவுடன் பெண் போட்டியாளர் ஒருவருடன் சண்டைச் செய்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் நிறுத்தாமல், “ நீங்க படிச்சவங்க தானே மரியாதையாக பேசுங்க..” என்றும் கை நீட்டி கூறுகிறார். பிரச்சினை பெரிதாக வெடிக்க அங்கிருந்தவர்களும் பெண் போட்டியாளருக்கு ஆதரவாக பேச ஆரம்பிக்கிறார்கள்.
யாருக்கும் பதில் கூற முடியாமல் திவாகரன் அந்த இடத்தை விட்டு மெதுவாக நகர்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |