Bigg Boss 9: கை நீட்டி பேசாத.. கொந்தளிக்கும் திவாகரன்- வாயை அடக்கிய கெமி
கை நீட்டி பேசாதீங்க.. என கொந்தளிப்பில் கத்திய திவாகரனை கெமி ஒரே வார்த்தையால் அடக்கியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
தமிழில் கடந்த எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனை ஆரம்பிக்கவுள்ளது. எந்தவித தொலை தொடர்பு வசதிகளும் இல்லாமல் சுமாராக 100 நாட்கள் கடந்து ஒரு வீட்டில் தன்னுடைய தனி திறமையை காட்டி விளையாட வேண்டும்.

நேற்றைய தினம் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
கொரட்டை தொல்லை தாங்கல..
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9-ன் முதல் நாளே பிக்பாஸ் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் திவாகரன் இரவு முழுவதும் பிக்பாஸ் வீட்டில் கொரட்டை விட்டு போட்டியாளர்களை தூங்க விடாமல் தொல்லை செய்துள்ளார்.

இதனால் கடுப்பான போட்டியாளர்கள் திவாகரனிடம் கூற, அவர் கடுப்பாகி நான் வாட்டர்மிலன் ஸ்டார் என கூறுகிறார். அதற்கு கெமி, “ நீங்க யாரா வேணும்ன்னாலும் இருங்க.. நீ-ன்னு பேசாதீங்க..” என்று எச்சரிக்கிறார்.
பிரச்சினை பெரிதாக மாறியதும் என்ன செய்வது என திவாகரன் அங்கிருந்து நகர்ந்துள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |