ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம்
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து முதல் நாளே வெளியேற்றப்பட வேண்டும் என பிரபலங்களால் தெரிவுச் செய்ய திவாகரன் மீது ஏன் இவ்வளவு வன்மம் என்பதை பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
தமிழில் கடந்த எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனை ஆரம்பிக்கவுள்ளது. எந்தவித தொலை தொடர்பு வசதிகளும் இல்லாமல் சுமாராக 100 நாட்கள் கடந்து ஒரு வீட்டில் தன்னுடைய தனி திறமையை காட்டி விளையாட வேண்டும்.
இதுவரையில் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இடையில் சிம்பு தொகுத்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
நேற்றைய தினம் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
முதல் நாளே போச்சே..
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9-ன் முதல் நாளே பிக்பாஸ் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்.
அதில் பிக்பாஸ் வீட்டில் இருப்பது ஒரு நாள் கூத்து, இவர்கிட்ட ஒரு நாளைக்கான சரக்கு தான் இருக்கு என்றால் அது யார்?” என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அந்த டாஸ்க்கில், திவாகரன், கலையரசன், வியானா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதிகமான பிரபலங்களால் தெரிவுச் செய்யப்பட்ட கலையரசன் இந்த வாரம் நாமினேஷனில் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |