முத்துவிடம் வசமாக சிக்கிய சிந்தாமணி.. வில்லத்தனத்தில் மிரட்டும் ரோகிணி- சூடுபிடிக்கும் கதைக்களம்
சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவின் வண்டியை சிந்தாமணி தான் ஆட்கள் வைத்து கடத்தியிருக்கிறார் என்ற விடயம் முத்துவிற்கு தெரியவருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் கோமதி பிரியா நாயகியாகவும், வெற்றி வசந்த் நாயகராகவும் நடித்து வருகிறார்கள்.
மூன்று மகன்களும், மூன்று மருமகள்களும் ஒரே குடும்பமாக வாழும் பிரச்சினைகளை கருவாக வைத்து சீரியல் நகர்த்தப்படுகிறது.
சீரியலில், மனோஜுற்கு பிடித்த அம்மாவாகவும், முத்துவை வெறுக்கும் அம்மாவும் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் விஜயா. பணத்தை மாத்திரம் மதித்து மீனாவை துன்புறுத்தி வருகிறார்.
வில்லத்தனத்தில் மிரட்டும் முத்து
இந்த நிலையில், க்ரிஷை எப்படியாவது தன்னுடன் வைத்து வளர்க்க வேண்டும் என நினைக்கும் மீனா, ரோகிணியின் நண்பியான வித்யாவிடம் உதவிக் கேட்க, அதனை வித்யா ரோகிணியிடம் கூறி விடுகிறார்.
மீனாவிற்கு க்ரிஷை பற்றி யோசிக்க விடாமல் என்ன சரி செய்ய வேண்டும் என திட்டம் போடும் ரோகிணி என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆட்களை வைத்து சிந்தாமணி மீனாவின் வண்டியை கடத்துகிறார்.
இந்த விடயம் முத்துவிற்கு தெரியவர சிந்தாமணி எதிரே நின்று, “நீங்க தானே என்னுடைய மனைவியின் வண்டியை தூக்கியது..” என திமிருடன் கேட்கிறார். உண்மையை எப்படி கண்டுபிடித்திருப்பார் என அலைமோதும் சிந்தாமணி பதில் கூறாமல் நிற்கிறார்.
சிந்தாமணியை பிடித்தால் விஜயாவும் மாட்டுக் கொள்வாரா? என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |