மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சான்ட்ரா! பிரஜனிடம் முட்டிபோட்டு கண்ணீர்மல்க கூறிய விடயம்
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சான்ட்ரா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். வந்ததுமே ரம்யாவுடன் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.
மேலும் 20 நாட்கள் பிரஜனை பிரிந்திருந்த அனுபவம் குறித்து சான்ட்ரா கண்ணீர் மல்க பேசிய காட்சி தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 9
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகின்றது. பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கின்றது.

கடந்த வாரங்களில் டிக்கெட் டூ ஃபினாலே, டாஸ்க் அதனை தொடர்டந்து பணப்பெட்டி டாஸ்க் என இறுதி கட்டம் மிகவும் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறிவருகின்றது.
கானா வினோத் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 18 லட்சத்துடன் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதனை தொடர்ந்து சீசன் 9 இல் இறுதிசுற்றுக்கு செல்லப்போகும் போட்டியாளர்கள் 5 பேர் இல்லை 4 பேர் தான் என அதிரடி முடிவு எடுக்கப்பட்டு, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், சான்ட்ரா வெறியேற்றப்பட்டார்.
இந்த வாரத்துடன் பிக்பாஸ் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், இப்போது வரையில் யார் லைட்டில் வின்னர் என்பதை சரியாக நிர்ணயம் செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது.

இந்நிலையில் ரெட்காட் வாங்கி வெளியேறிய பார்வதி மற்றும், கம்ருதீன் தவிர வெளியேற்றப்பட்ட மற்ற அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
இன்றைய தினம் சான்ட்ரா வீட்டிற்குள் வந்த promo காணொளி தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |