பிக்பாஸ் முடிந்தும் முடியாத உறவு- நெருக்கமாக இருக்கும் படத்திற்கு குவியும் விமர்சனம்
பிக்பாஸ் சீசன் முடிந்த பின்னர் விஷால்- அன்ஷிதா இருவரின் உறவும் முடியவில்லை என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் வெகு விமர்சையாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 8 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது ஒன்பதாவது சீசனுக்கு செல்லவிருக்கிறது.
ஆனால் வழக்கமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியில் இல்லாமல் வேறு தொலைக்காட்சியில் இனி வரும் சீசன்கள் ஒளிபரப்பாகும் எனவும் கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல சின்னத்திரை ஜோடிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளன. ஆனாலும் ஒருசிலர் மாத்திரமே இன்னும் உறவில் இருக்கிறார்கள்.
விஷால்- அன்ஷிதா
இந்த நிலையில், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் பிரபலமாகியவர்கள் தான் விஷால்- அன்ஷிதா.
இவர்கள் ஆரம்பத்தில் இருந்து நண்பர்களாக இருப்பதாகவும், அவர்களுக்கு இடையில் வேறு எந்த உறவும் இல்லை என்று தான் கூறுகிறார்கள். மாறாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது இருவரும் நெருக்கமாக இருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளானது.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் முடிந்த பின்னரும் இருவரும் ஜோடியாக பொது இடங்களுக்கு சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் காணொளிகளாகவும் புகைப்படங்களாவும் உள்ளன.
அந்த வகையில், விஷால்- அன்ஷிதா இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதில் “ இருவரும் செம்ம ஜோடி...” என கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

