வாய்ப்பை தட்டிகழித்த சிறக்க ஆசை நடிகை.. உடனே நடிகையை மாற்றிய வெற்றிமாறன்
சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகியாக நடிக்கும் கோமதி பிரியாவுக்கு தனுஷ்வுடன் நடிக்கும் வாய்ப்பை வெற்றிமாறன் கொடுத்துள்ளதாகவும், அதனை அவர் மறுத்ததாகவும் கூறியுள்ளார்.
கோமதி பிரியா
சினிமா நாயகிகளுக்கு நிகராக சின்னத்திரை நாயகிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதன்படி, தற்போது பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகியாக கோமதி பிரியாவும், கதாநாயகராகவும் வெற்றி வசந்த்தும் நடித்து வருகிறார்கள்.
கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை கருவாக வைத்து இந்த சீரியல் கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. சிறகடிக்க ஆசை சீரியலுக்கு முன்னதாக கோமதி பிரியா தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.
இவர், சினிமாவில் வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்து விட்டு, சீரியலில் நடிக்க வந்ததாக கூறப்படுகிறது.
தனுஷ்க்கு ஜோடியாக நடிக்க கிடைத்த வாய்ப்பு
இந்த நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் இந்த விடயத்தை விளக்கமாக ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிப்பதற்கு முதலில் கோமதி பிரியாவுக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது.
பின்னர் திருந்நெல்வேலியில் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த சமயத்தில் தெலுங்கு சீரியலில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.
இதனால் பட வாய்ப்பை தவிர்த்து சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். கோமதி பிரியா நடிக்க மறுத்த பின்னரே அந்த வாய்ப்பு நடிகை அம்மு அபிராமிக்கு கொடுத்துள்ளார். அவருக்கு கிடைத்த அந்த வாய்ப்பு சினிமா பயணத்தில் திருப்பு முனையாக அமைந்துள்ளது. ஆனால் எனக்கு சீரியலில் நடிப்பது தனக்கு சந்தோஷம்.. என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |