எங்க லவ் மேட்டர் தெரிஞ்சதும் அஜித் சார் இதுதான் சொன்னார்: அமீர் பாவனி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
பிக்பாஸ் பிரபலங்களான அமீர் மற்றும் பாவனி அஜித் குமார் மற்றும் அவர்களின் காதல் தொடர்பிலும் சில சுவாரஸ்ய தகவல்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளனர்.
அமீர் பாவனி
மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைவருமே ஏதோ ஒரு வகையில் முன்னேற்றமடைந்திருக்கிறார்கள். அந்தவகையில் வந்த காதல் ஜோடிகள் தான் அமீர் மற்றும் பாவனி.
இவ்வாறிருக்கையில், இவர்கள் துணிவு படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கிறார்கள் மேலும், இவர்களுடன் பிக்பாஸ் சிபியும் நடித்திருக்கிறார்கள்.
அண்மையில் இவர்கள் மூவரும் அஜித்துடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அது தொடர்பில் சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்திருந்தார்கள்.
அஜித்துடன் 15 நாட்கள்
துணிவு படத்தின் தொடக்கத்தில் இவர்கள் இருவருக்கும் துணிவு படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வந்த போது நாங்கள் நம்பவில்லை அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டோம்.
பின்னர் தான் அது உண்மை என தெரிந்தது. இந்நிலையில் தான் பாங்கொக்கில் சிபியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து முதல் படப்பிடிப்பு மிகவும் பதற்றத்துடன் இருந்தோம்.
அஜித் சாரை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல இருந்த எங்களுக்கு அவர் எங்கள் பக்கம் வந்து அமருவார் என்று கூட நினைக்கவில்லை. அஜித் சார் எல்லோரிடமும் அன்பாக பழகினார்.
தான் வரும் போது யாரும் எழுந்து நிற்க கூடாது என்றும், எழுந்து நின்றால் பேவிகால் போட்டு ஒட்டி விடுவதாகவும் கூறினாராம். அவருடன் பணியாற்றிய 15 நாட்கள் மிகவும் அற்புதமாக இருந்தது என இவர்கள் கூறியிருக்கிறார்கள்.
கடைசிநாள் 15
நாட்கள் எவ்வாறு கழிந்ததே தெரியவில்லை, அந்த நாட்களை எங்களால் மறக்கவும் முடியாது. 15ஆவது நாள் நான் அஜித் சார்க்கு போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை.
பின்னர் அஜித் திரும்பவும் போன் செய்து சாரி அமீர் நான் பேக்கிங் செய்து கொண்டிருந்தேன். அதனால்தான் என்னால் போன் பேச முடியவில்லை என்று கூறி எங்கள் பேச ஒரு இடத்திற்கு அழைத்தார்.
அங்கு நான் பாவனி, சிபி மற்றும் அஜித் மட்டும் தான் இருந்தோம். அங்கு எங்களை அமரவைத்து பல விஷயங்களை எங்களிடன் பேசினார்.
பின்னர் அந்த சந்திப்பு முடிந்து அவர் செல்லும் போது பை சி யூ என்று கூறியது தங்களுடைய நினைவிலேயே நிற்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.