இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்: முதன்முதலாக ஷிவின் பற்றி மனம் திறந்து பேசிய கதிர்
பிக்பாஸ் டைட்டிலை ஷிவின் தான வெல்வாரென நினைத்தேன் என பிக்பாஸ் போட்டியாளர் சமீபத்திய நேர்காணலொன்றில் கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் கதிரவன்
பிரபல தொலைக்காட்சியொன்றில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி 5 சீசனைகளையும் கடந்து 6ஆவது சீசனும் கடந்த மாதம் முடிவடைந்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் விஜேவாக வாழ்க்கையை 2011இல் தொடங்கிய கதிரவனும் போட்டியாளராக இருந்தார். இவர் பிரபல தொலைக்காட்சியொன்றில் தன் இனிமையான பேச்சால் அனைவரையும் குறிப்பாக பெண்களையும் கவர்ந்தார்.
இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கென்று இன்னும் அதிகமான ரசிகர் பட்டாளம் அதிகரித்தது, மேலும் இவர் இந்நிகழ்ச்சியில் 100 நாளுக்கு மேலாக விளையாடி வந்தார்.
இறுதி வரை செல்வார் என மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் திடீரேன பணப்பெட்டியை அவர் எடுத்துக்கொண்டு போட்டியை விட்டு வெளியேறியிருந்தார். இது அவரின் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்தது.
ஷிவின் பற்றி பேசிய கதிர்
பிக்பாஸ் வீட்டில் மோதல் தொடங்கி காதல் வரை அனைத்து சம்பவங்களும் நிகழும் இதில், ஷிவின் கதிரை காதலிப்பதாக பலமுறை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், தற்போது நேர்காணலொன்றில் ஷிவின் பற்றி கதிர் பேசியிருக்கார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
தொகுப்பாளர் வெற்றியாளர் யாராக இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தீர்கள்..? என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த கதிரவன் ” பிக் பாஸ் வீட்டில் எல்லாருமே நன்றாக தான் விளையாடினார்கள்.
நான் ஷிவின் தான் வெற்றியாளராக வேண்டும் என்று நினைத்தேன். எனவே அவங்க வெற்றிபெற்றிருந்தால் சேர்ந்து கொண்டடிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ஏன் பணப்பெட்டியுடன் வெளியேறினேன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
அதில், நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றது டைட்டிலை ஜெயிக்கிறது இல்ல. பணப்பெட்டி வைத்தால் அதனை எடுத்துக்கொண்டு வெளிய வந்துவிட வேண்டும் என்றும் முன்பே செய்து வைத்திருந்தேன்.
நான் நினைத்தது போலவே பணப்பெட்டியை வைத்தார்கள். எனவே பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன்.
நான் வீட்டை விட்டு வெளியேறும் போது என்னை வழியனுப்ப ஜனனி, ஏடிகே தவிர எல்லாரும் மொத்தமாக இருந்தார்கள் அது ரொம்பவே சந்தோசமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.