ஜனனியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஏடிகே! பரபரப்பான ப்ரொமோ காட்சி
பிக்பாஸ் வீட்டில் ஜனனியிடம் சென்று ஏடிகே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ள காணொளி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார் என்ற கேள்வி அதிகமாகியுள்ளது.
போட்டியாளர்களுக்குள் ஒரு சமாதானம் இல்லாத டாஸ்க்கையே பிக்பாஸ் கொடுத்து வருகின்றார். கடந்த வாரம் பொம்மை டாஸ்கில் அரங்கேறிய சண்டை தற்போது இனிப்பு கம்பெனி வரை தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் சமாதானம் நிகழ்வு அரங்கேறியுள்ளது. நேற்றைய தினத்தில் ஜனனி, ஏடிகே இருவருக்கும் இடையே மனஸ்தாபம் வந்தது. இதில் ஏடிகே மிகவும் வேதனைப்பட்டார்.
பின்பு ஜனனி ஏடிகே-யிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நிலையில், தற்போது ஏடிகே-யும் ஜனனியிடம் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார்.