ஓ... சினிமாவில் நடிக்கும் ஆசை வேற இருக்கானு நக்கலா கேப்பாங்க! அஞ்சனா ஓபன் டால்க்? வைரலாகும் காட்சி
பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் வி ஜே அஞ்சனா 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார்.
தற்போது மீண்டும் தொகுப்பாளினியாக ரி-என்ட்ரி கொடுத்து உள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வந்தார்.
— Anbu (@Mysteri13472103) March 15, 2021
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அந்த வகையில் ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் படங்களில் நடிப்பது இல்லை என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், இந்த 12 ஆண்டுகளில் பல பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் இல்லை.
அதே போல நான் போட்டோ ஷூட் பண்ணலே, ஓ சினிமாவில் நடிக்கும் ஆசை வேற இருக்கானு நக்கலா கேப்பாங்க. சின்ன ஸ்க்ரீன் பெரிய ஸ்க்ரீன் என்பது கிடையாது. என்னுடைய இடம் இதான் என்று கூறியுள்ளார்.