கிளாமர் போஸ் கொடுத்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை! 27 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தார் தெரியுமா?
சுமார் 27வருடங்களுக்கு முன்னர் திரைப்படத்தில் கிளாமராக நடித்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியல் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
இந்த சீரியல் முதல் பாகத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது இரண்டாம் பாகம் சென்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது இரண்டாம் பாகம் என்பதால் பாரதி - கண்ணம்மாவின் காதல் கதை சென்றுக் கொண்டிருக்கின்றது.
மேலும் இதில் முதல் பாகத்தில் நடித்த கண்ணம்மா, பாரதியின் அம்மா, வெண்பா என முக்கிய கதாபாத்திரங்கள் இந்த சீசனிலும் நடித்து வருகின்றனர்.
வினுஷாவின் யதார்த்தமான நடிப்பால் பழைய கண்ணம்மாவிற்குரிய மவுஸை இவரும் பெற்றுக் கொண்டுள்ளார்.
மார்டன் ஆடையில் பாரதியின் அம்மா
இந்நிலையில பாரதியின் அம்மாவாக நடிக்கும் ரூபா ஸ்ரீ சின்னத்திரை மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தற்போது உதிரிப்பூக்கள் என்ற தொடரிலும் நடித்து வருகிறார். மேலும் இவரின் யதார்த்தமான நடிப்பால் பல கோடி ரசிகர்களை தனவசப்படுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் ரூபா ஸ்ரீ சீரியல்களில் பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளப்பக்கங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
சுமார் 27 வருடங்களுக்கு முன்னர் ஒரு திரைப்படத்தில் படு கிளாமாராக ஆடை அணிந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த பலர் தற்போது “சேலையில் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் ரூபாவா இது” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.