தந்தையில்லாமல் தவிக்கும் கண்ணம்மாவின் குழந்தை! பாரதியின் முடிவு என்ன?
பாரதியிடம் என்னுடைய அப்பா எனக்கு வேணும் என்று தவிக்கும் குழந்தை கண்ணீருடன் வெளியான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா சீரியல்
ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பை பெறாவிட்டாலும், தற்போது மற்றைய சீரியல்களை விட டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் ஓடிக் கொண்ருக்கிறது.
இதில் வரும் பாரதி, கண்ணம்மா, வெண்பா, சௌதர்யா ஆண்டி போன்ற கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றுள்ளனர்.
இவர்களின் யதார்த்தமான நடிப்பால் சீரியலின் ரசிகர்கள் எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.
அதிகம் மவுஸ் கொண்ட கதாபாத்திரம்
இந்த கதையில் வரும் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்திலேயே அதிகமான மவுஸ் காணப்படுகிறது.
இந்நிலையில் பாரதியின் குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் பாரதியை வேணாம் என்றுக் கூறிவிட்டு, தற்போது கண்ணம்மாவுடன் வசித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து லட்சுமி தனக்கு ஒரு அப்பா வேண்டும் என்று பாரதியிடம் கூறி அழும் காட்சி இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
லட்சுமியின் குமுறல்கள்
மேலும் 'பாரதியும் கண்ணம்மாவும் மீண்டும் இணைந்து ஒன்றாக வாழ வேண்டும். அப்போது தான் இருவருக்கும் அப்பா, அம்மா கிடைப்பார்கள்' என லட்சுமி நிபந்தனையொன்றை முன்வைத்துள்ளார்.
இதனை பார்த்த பாரதிகண்ணம்மா ரசிகர்கள் இருவருக்கும் ஏற்றால் போல் கண்ணம்மா சற்று இறங்கி வரலாம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.