பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் இதுதான்! திருமண மேடையில் ஆர். ஜே பாலாஜி
நடிகர் பாலாஜி பாரதி கண்ணம்மாவின் திருமண நிகழ்வில் சென்று தன்னுடைய புதிய படத்தை ப்ரோமோட் செய்துள்ளார்.
பாரதி கண்ணம்மாவில் பயன்படுத்தப்படும் உத்திகள்
சமிபக்காலமாக பிரபல தொலைக்காட்சி மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர்களில் பாரதி கண்ணம்மா முதல் இடத்தை பிடிக்கிறது. இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து வீட்டிலுள்ள கணவன் மனைவிக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
மேலும் பாரதி கண்ணம்மா சீரியல் என்றால் தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது அந்தளவு மிகவும் பிரபல்யமடைந்த சீரியலாக இயக்குநர் கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து இந்த சீரியலில் ஆரம்பத்தில் ரீச் கொடுத்த ரோசினி பாதியில் சீரியலை விட்டு சென்றதும் பலருக்கும் பயம் இருந்தது.
ஆனால் தற்போது கண்ணம்மா கேரக்கடருக்கு ஏற்ப புதிய கண்ணம்மா களமிறங்கி நாளுக்கு நாள் டுவிஸ்ட்டுடன் கதைக்களம் நகர்வதால் இதற்கான ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள்.
மீண்டும் ஒரு திருமணமா?
இதன்படி, பாரதி கண்ணம்மா சீரியல் கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சீரியல் ஓடிக் கொண்டிருக்கும் போது பாரதியின் மனம் இடையில் மாறி கண்ணம்மாவை சேர்ந்து வாழ அழைத்த போது அதற்கு கண்ணம்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததுடன் இருக்காமல் அவருடைய குழந்தைகளை கூட்டிக் கொண்டு தனது சொந்த ஊருக்கு வந்த நிலையில் பாரதிக்கு விபத்து ஏற்பட்டு சுயநினைவை இழந்ததால் இவர்களின் காதல் மீண்டும் மலர்வது போன்று காட்டி சீரியலை மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்.
மேலும் பாரதியின் நினைவுகளை மீட்கச் சென்ற கண்ணம்மா மீண்டும் பாரதியுடன் இணைந்து வாழ பச்சைக் கொடிக் காட்டியுள்ளார்.
இதற்கு அடுத்தப்படியாக கண்ணம்மாவிற்கும் பாரதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டு இருக்கிறது.
சீரியலில் திரைப்படத்தை பிரமோட் பிரபலம்
இந்த நிலையில் ஆர். ஜே பாலாஜி அவர்கள் பாரதியின் திருமணத்திற்கு வந்த நிலையில் தன்னுடைய புதிய திரைப்படம் வெளிவந்து இருப்பதாகவும், இவர்களின் த்ரில்லர் திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும் பிரமோட் செய்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் பிக் பாஸ் சிவின் கணேஷனும் கலந்துக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த பாரதி கண்ணம்மா ரசிகர்கள் “சீரியலை கூட விடாமல் பிரமோட் செய்கிறாரே” என கலாய்க்கும் விதமாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
And finally, நான்கு வருடங்களாக தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட
— RJ Balaji (@RJ_Balaji) February 1, 2023
பாரதி - கண்ணம்மாவின் திருமண வைபவத்தில் கலந்துக்கொண்டேன்.!!!?#RunBabyRun ? meets #BarathiKannamma ❤️@vijaytelevision ?@disneyplusHSTam ? pic.twitter.com/nDOyMBauk3