26 வருடங்களுக்கு முன்னர் ஆளை மயக்கும் கிளாமர் போஸ் கொடுத்த சௌந்தர்யா! தீயாய் பரவும் புகைப்படம்
சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் திரைப்படத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியல் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
மேலும் ஆரம்பத்தில் இந்த சீரியல் சற்று பரபரப்பாக செல்லவில்லையென்றாலும் பாரதி மற்றும் கண்ணம்மா விவாகரத்து தொடர்பில் தகவல் வெளியானதிலிருந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் ஓடிக் கொண்டிருகிறது.
இந்த சீரியலின் வெற்றிக்கு ரோஷினிக்கு அதிக பங்கு உண்டு என்றே கூற வேண்டும்.
இத்தொடருக்கு ஒரு புதிய திருப்புமுனை கொடுக்கும் வகையில் ரோஷினி சீரியலை விட்டுவிலகியதும் புதிய கண்ணம்மாவாக வந்த வினுஷாவை மக்கள் கண்ணம்மாவாக ஏற்றுக்கொள்ள சற்று காலத்தாமதமாகியது.
இவரின் யதார்த்தமான நடிப்பால் பழைய கண்ணம்மாவிற்குரிய மவுஸை இவரும் பெற்றுக் கொண்டுள்ளார்.
பாரதியின் அம்மாவின் கிளாமர் புகைப்படம்
இந்நிலையில பாரதியின் அம்மாவாக நடிக்கும் ரூபா ஸ்ரீ சின்னத்திரை மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தற்போது உதிரிப்பூக்கள் என்ற தொடரிலும் நடித்து வருகிறார். மேலும் இவரின் யதார்த்தமான நடிப்பால் பல கோடி ரசிகர்களை தனவசப்படுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் ஒரு திரைப்படத்தில் படு கிளாமாராக போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்கில் பகிரப்பட்டு வருகிறது.
இதனை பார்த்த பலர் தற்போது சேலையில் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் ரூபாவா இது என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.