விஜய்யை நிராகரித்த பாரதிராஜா - மனமுடைந்து அவரே பேசிய காணொளி
விஜய்யை நான் நிராகரித்துவிட்டேன். அன்று நான் செய்த தவறு அது பாரதிராஜா உருக்கமாக பேசிய காணொளி வைரல்.

இமயம் பாரதிராஜா
விஜய்யை வைத்து படம் எடுக்க பாரதிராஜா மறுத்துவிட்டதாக அவரே சொன்ன ஒரு வீடியோவை விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இயக்குநர் பாரதிராஜா 84 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். இவருடைய இறுதிச்சடங்கு அரச மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நடந்தது.
இந்த நிலையில் அவர் விஜய்யை பாரதி ராஜா மறுத்ததாக சொல்லப்படும் ஒரு காணொளி வைரலாகி வருகின்றது.

விஜய்யை நிராகரித்த பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜாவிடம் விஜய் தந்தை ஒருநாள் தனது மகன் விஜய்யை வைத்து ஒரு கிராம படம் எடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பாரதிராஜா மறுப்பு தெரிவித்து உள்ளார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

வைரலாகும் அந்த வீடியோவில் பாரதிராஜா கூறுகிறார் “எஸ்.ஏ. சந்திரசேகர் அவரது மகன் விஜய்யை கூடிக்கொண்டு வந்தார். உன்னுடைய கிராம படத்தில் நடிக்க விஜய் ஆசைப்படுகிறான் என கூறினார்.
எனக்கு தோனவில்லை, இந்த பையன் வேண்டாம். நீயே உன் மகனை வைத்து ஒரு படம் இயக்க வேண்டியதானே என்று கூறி அவர்களை அனுப்பி விட்டேன்.
ஆனால் அன்று நான் நிராகரித்த விஜய் இன்று நம்பர் 1 ஹீரோவாக இருக்கிறார். இதை நான் அவரிடமே சொல்லி இருக்கிறேன். நீ வேண்டாம் என்று நான் உன்னை அனுப்பி விட்டேன் என கூறினேன்.
அதற்கு நீங்கள் என்னை ரிஜகட் செய்தது என் மனதில் இன்னும் இருக்கிறது என விஜய் கூறினான்”. என அந்த வீடியோவில் பாரதிராஜா மிக உருக்கமாக பேசி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |