இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் பாக்கியா! ரசிகர்களை அதிர வைத்த புகைப்படம்
இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் வகையில் பாக்கியலட்சுமி பாக்கியா அலங்காரத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சீரியலில் லீட் ரோல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாகச் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் ஆரம்பத்திலிருந்து பாக்கியாவிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.
மேலும் பாக்கியா தான் இந்த சீரியலின் கதாநாயகி என்பதால் இவரின் ட்ரோலுக்கு தனி மரியாதையும் இருந்து வருகின்றது.
தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்தாலும் அவரை எதுவும் கூறாமல் அவர் போக்கில் விட்டு தன்னுடைய வேலைகளை சரியாக பார்க்கும் பாக்கியாவின் தைரியம் இல்லத்தரசிகளின் இதயங்களை வென்றுள்ளது.
மணக்கோலத்தில் இருக்கும் பாக்கியா
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாக்கியா அவரின் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் கரு நீல நிற புடவை அணிந்து, நகைள் அணிந்து, கலக்கலாக போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த சீரியல் ரசிகர்கள் “ கோபியை போல் உங்களுக்கும் இரண்டாவது திருமணமா? என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இன்னும் சிலர் வயதானாலும் உங்களின் அழகும் ஸ்டைலும் இன்றும் குறையவில்லை” எனவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.