காய்கறியே இல்லாமல் ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் செய்வது எப்படி?
எந்தவொரு காய்கறியும் இல்லாமல் வெங்காயம், தக்காளி கொண்டு மிக ருசியாக ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 20
வெள்ளைப்பூண்டு பல் – 7
துவரம் பருப்பு – 50 கிராம்
புளி – சிறிதளவு
வெல்லம் – சிறிதளவு
வரமிளகாய் – 2
கொத்தமல்லி,கறிவேப்பில்லை – சிறிதளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 1
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சாம்பார் தூள் – தேவையான அளவு
மல்லித்தூள் – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாய் வைத்து சூடாகிய பின் எண்ணெயய் சேர்த்து கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்தபிறகு வெங்காயம், கறிவேப்பில்லை, கொத்தமல்லி, வரமிளகாய் சேர்த்து வதக்கி தேங்காய், தக்காளி சேர்த்து கிளறிவிடவும்.
பின்பு புளி கரைசல், மசாலா,உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு கொதிக்கவிடவும்.
கொதிவந்த பிறகு வேகவைத்து வைத்திருக்கும் பருப்பு சேர்த்து உப்பு சேர்த்து கிளறிவிட்டு கொதிக்க விடவும்.
இதன்பின்னர் கடைசியில் பெருங்காயத்தூள், மல்லித்தலை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான சாம்பார் ரெடி!!!