இந்த உணவுடன் முருங்கை இலையை சேர்த்து சாப்பிடுங்க... நோயெதிர்ப்பு சக்தி இருமடங்காகுமாம்!
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய முருங்கைக்கீரை, உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவதுடன் ஏராளமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகவும் அறியப்படுகின்றது.
முருங்கை கீரையானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமான பிரச்சனைகளை போக்குவது, இரத்த அழுத்தத்தை சீராக்குவது மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு வழங்குகின்றது.
முருங்கைக்கீரையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
முருங்கைக்கீரை சாறு இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்ருப்பதுடன் உடலில் சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
இந்த கீரையுடன் ஒரு சில முக்கிய உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிடும் போது இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அபரிமிதமாக அதிகரிப்பதுடன், அற்புதமாக ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்.
அந்தவகையில், முருங்கைக்கீரையுடன் எந்த பொருட்களை சேர்த்து உட்கொள்ள வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சேர்த்து சாப்பிட வேண்டிய 5 உணவுகள்
1. மஞ்சள்
பொதுவாகவே மஞ்சளில் குர்குமின் எனும் என்சைம் அதிகளவில் காணப்படுகின்றது. இது புற்றுநோய் செல்களின் வளர்சியை கூட அசால்ட்டாக கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அப்படி ஆற்றல் வாய்ந்த மஞ்சள் தூளை முருங்கைக்கீரையுடன் சேர்த்து சாப்பிடும் போது, உடலினுள் ஏற்படும் காயங்கள் அல்லது வீக்கம் குறைவதோடு, நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக மாறும்.
2. இஞ்சி
ஆயுர்வேம் மற்றும் நீவீன மருத்துவர்களின் கருத்தின் அடிப்படையில்,இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் செரிந்து காணப்படுவதால், அதனை முருங்கைக்கீரையுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடலில் நோயெதிர்ப்பு ஆற்றலானது இருமடங்கு அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
3. சிட்ரஸ் பழங்கள்
பெதுவாகவே சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.மேலும் வைட்டமின் சி உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.அதனால் முருங்கை கீரையுடன் சிட்ரஸ் பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது இரும்பு சத்தை சீராக ஊறிஞ்சி நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைய பெரிதும் துணைப்புரிகின்றது.
4. பூண்டு
இயற்கையாகவே பூண்டில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகமாக இருப்பதால், முருங்கைக்கீரையுடன் சேர்த்து எடுக்கும் போது நோயெதிர்ப்பு சக்தியானது பல மடங்கு அதிகரிக்கின்றது.
5. பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் செரிவாக காணப்படுகின்றது. பாதாமை பொடி செய்து, முருங்கைக்கீரை பொரியலுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முழுமையாக கிடைப்பதுடன், நோயெதிர்ப்பு சக்தியும் இருடங்காகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |