நடிகை நயன்தாரா வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனை! என்ன நடந்தது?
பிரபல நடிகை நயன்தாராவின் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள சொகுசு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரைப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா. இவரை பற்றி சொல்லி தான் தெரிய தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகின்றார்.
20 வருடங்களுக்கும் மேல் சினிமா துறையில் தன்னை நாயகியாகவே தக்கவைத்துக்கொண்டுள்ள நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பாலிவுட்டில் நயன்தாரா அறிமுகமாக ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததுடன் 1000 கோடிக்கு மேல் வசூல் வெறியாட்டம் ஆடியது.
தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா அறியப்படுகின்றார். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.
வெடிகுண்டு மிரட்டல்
திரைப் பிரபலங்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவம் சம்பவங்கள் தற்போது தொடர்கதை ஆகி வருகிறது.
இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. குறித்த மெயிலில், நடிகை நயன்தாராவுக்கு சொந்தமான சொகுசு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் சோதனையின் முடிவில் வழக்கம் போல் இந்த தகவலும் பொய் என்பது தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |